முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் அரசுமுறை வெளிநாடு பயணமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதி இரவு துபாய் சென்று, நான்கு நாட்கள் பயணத்தை முடித்துவிட்டுக் நேற்று சென்னை வந்தடைந்தார்.

இந்த நிலையில்தன் முதல்வர் துபாய் சென்றது தொடர்பாக பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை, ‘‘குடும்ப பணத்தை முதலீடு செய்வதற்காக குடும்பத்தோடு சென்றிருக்கிறார்’’ என்று குற்றச்சாட்டை வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘அரசு செலவில் தனி விமானத்தில் குடும்ப சுற்றுலா சென்றிருக்கிறார்கள்… முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை… முதலீடு செய்வதற்காக சென்றிருப்பதாக, நான் சொல்லவில்லை. மக்கள் சொல்கிறார்கள். அதே போல், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்கள் சென்றார்கள். ஆனால், முதல்வருடன் அவரது மனைவி சென்றதில் தவறில்லை. பேரக்குழந்தைகள், மருமகன் சென்றதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றார்.

இக்குற்றாட்டுக்கு தி.மு.க. தரப்பில், ‘தி.மு.க. கட்சி நிதியிலிருந்து விமானத்திற்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு பணத்தை செலவு செய்யவில்லை’’ என்று தி.மு.க. தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், ‘‘தி.மு.க. கட்சி சார்பில் செலவு செய்து அனுப்பப்பட்ட தனி விமானத்தில், அரசு அதிகாரிகள் எப்படி பயணம் செய்யலாம்… அரசு அதிகாரிகளை கட்சி செலவில் எப்படி அழைத்துச் செல்லலாம்’’என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

முதல்வரின் முதல் வெளிநாட்டப் பயணத்தின் சர்ச்சைகள் எப்போதுதான் முடிவுக்கு வரப்போகிறதோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal