தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஆலத்துடையான்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சீனிவாசப்பெருமாள் கோயில் . இக்கோயிலில் சீனிவாசப்பெருமாள், பத்மாவதி தாயார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன.

மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் நேர்த்திக்கடனாக கட்டப்பட்ட இக்கோவிலில் 1808&ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக கல்வெட்டில் காண முடிகிறது.

இங்கு விநாயகர், தட்சிணா மூர்த்தி, வள்ளி – தெய்வாணை, சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கால பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளுடன் உள்ளது.

மிகவும் பழமையான சிவன் கோவிக்கு விவசாய நிலங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், ஒரு சிலர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலத்துடையாண்பட்டி சிவன் கோவில் இன்று பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடப்பதுதான், சிவ பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

எனவே, அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு அமைச்சராக பொறுப்பேற்றவுடன், சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டார். அதே போல் மிகவும் பழமைவாய்ந்த ஆலத்துடையாண் பட்டி சிவன் கோவிலை புணரமைத்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என்று ஆலத்துடையான் பட்டி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சிவ பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal