அ​தி​முக எம்​எல்​ஏக்​கள் 21 பேரின் தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிட்ட தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் முடிவுக்கு எதி​ராக தேசிய மக்​கள் சக்தி கட்சித் தலை​வர் எம்​.எல்​.ரவி உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்தாக்​கல் செய்​துள்​ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13 ஆம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, அதிமுக கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த 25 பேரில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் அளித்தனர். இதனால் அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். இதையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிட்டு அதனை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு​வில், ‘‘தமிழக சட்​டப்பேர​வை​யில் நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது 25 அதி​முக எம்​எல்​ஏக்​கள் அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இதைத் தொடர்ந்து கொறடா உத்​தரவை மீறிய எம்​எல்​ஏக்​கள்மீது கட்​சித் தாவல் தடை சட்​டத்​தின்​கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்​கக் கோரி அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேர​வைத் தலை​வ​ருக்கு மனு கொடுத்​தார்.

இந்​நிலை​யில் 25 எம்​எல்​ஏக்​களில் 4 பேர் ராஜினமா செய்​தனர். அதேவேளை​யில் 21 பேர் அதி​முக தலை​மைக்கு மன்​னிப்​புக் கடிதம் கொடுத்​தனர். இதைத் தொடர்ந்து அவர்​களுக்கு எதி​ரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்​பப்​பெற்று கொள்​வ​தாக அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேர​வைத் தலை​வ​ருக்கு கடிதம் எழு​தி​னார். அதனை ஏற்​றுக்​கொண்டு எந்த விசா​ரணை​யும் இன்றி எம்​எல்​ஏக்​கள் மீதான தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிடு​வ​தாக ஜே.சி.டி.பிர​பாகர் அறி​வித்​தார்.

முதலாவதாக 21 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்படுகிறது. அதுகுறித்து எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் எப்படி நடவடிக்கையை சபாநாயகர் கைவிட முடியும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையின் 2(1)பிரிவின் கீழ் செல்லுபடியான மன்னிப்பு மற்றும் திரும்பெப்பெறுதலை உள்ளடக்குகின்றனவா? கட்​சித் தாவல் நடவடிக்கை தொடங்​கிய பின்​னர் இவ்​வாறு மன்​னிப்பு வழங்க முடி​யு​மா, எம்​எல்​ஏக்​கள் மீதான நடவடிக்​கையை கைவிட முடி​யு​மா, இது​போன்ற உத்​தர​வு​களை பிறப்​பிக்க பேர​வைத் தலை​வருக்கு அதி​காரம் உள்​ளதா என்​பது குறித்து உச்ச நீதி​மன்​றம் விரி​வான விளக்​கத்​துடன் கூடிய உத்​தரவை பிறப்​பிக்க வேண்​டும்’’ எனக் கோரி​யுள்​ளார்.

இந்த மனு​ உச்ச நீதி​மன்​றத்​தில் விரை​வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal