‘‘இந்து மத விரோதிகளாக மாறுபவர்கள் தான் திமுகவினராக இருக்க முடியுமா?’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடையே, மதவாத, பிரிவினைவாத அரசியலை ஊக்குவிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி இந்து மக்கள் மனதை புண்படுத்தி வந்த மக்களவை உறுப்பினர் ராசா, மீண்டும் அரக்க குணத்துடன், இந்திய மக்களை இந்து மதத்தை பின்பற்றும் மக்களை களங்கப்படுத்தும் வகையில், பாசிச குணத்தோடு திமுகவினர் இந்து மத அடையாளங்களை அழிக்க வேண்டும் என்று கூறியதற்கு தமிழகம் முழுக்க கடும் கண்டனங்கள் வந்த போதும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவிக்காதது ஏன்?

இந்து மதத்தின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அறநிலைத்துறையை நிர்வகித்து, அறநிலையத்துறை சொத்துகளை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரித்து ஆதரவளித்து வருபவர் அமைச்சர் சேகர்பாபு. எனவே இந்து மதத்தை புண்படுத்திய விவகாரத்தில், கருத்து சொல்வதற்கு தகுதி இல்லாத அமைச்சராக விளங்கும் சேகர் பாபு, ஆராசா கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று பொத்தம் பொதுவாக கூறியதை பிரச்சனையை திசை திருப்ப முயல்வதை ஏற்க முடியாது.

திமுக வேட்டி கட்டுக்கொண்டு பொட்டு வைக்காதீர்கள். நீங்களும் பொட்டு வைத்து சங்கியும் பொட்டு வைத்து, நீங்களும் கயிறு கட்டி சங்கியும் கயிறு கட்டினால், சங்கிக்கும், உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.தயவு செய்து மாணவரணியாவது நெற்றியில் இருந்து பொட்டை எடுங்கள் என்றுதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசாஇந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாகபேசியதற்கு வருத்தம் தெரிவித்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

திமுக மாணவர் அணியினருக்கு அருவருக்கத்தக்க முறையில் அறிவுரை வழங்கிய ஆ.ராசா முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரிடம், இதுபோல இந்து மத விரோத பிரச்சாரத்தை முன் வைக்க, முதல்வர் அனுமதிப்பாரா?

சமீப காலமாக இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஐந்தறிவோடு பேசும் திராவிட மாடல் அறிவிலி அ.ராசா இதுபோல திமுகவில் உள்ள இஸ்லாமியரிடமும், கிறிஸ்தவர்களிடமும் அவர்களுடைய மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அறிவுரை கூறினால், ஆ.ராசா தமிழகத்தில் நடமாட முடியுமா?

சகிப்புத்தன்மைக்கு இலக்கணமாக விளங்கும் இந்து மதத்தின் கோட்பாடுகளை, இந்து மக்களின் பொறுமையை, நல்லெண்ணத்தை, இனியும் சோதிக்க நினைத்தால், தமிழகத்தில் ஆ.ராசா இனி வாழ்வதற்கு தகுதியற்றவராக அறிவிக்கப்படுவார்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா இந்துமத விரோதியாக மாறுங்கள் என்று மறைமுகமாக திமுகவினருக்கு விஷ விதைகளை விதைத்து திடீரென்று அறிவுரை கூறுவது ஏன்?

திமுக தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில், அல்லது தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரையின் பேரில் இதுபோல் திமுகவினரிடம் பேசினாரா? என்பதை ஆன்மீகவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்ளும் அமைச்சர் துரைமுருகன், திமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் திமுக கட்சியின் விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அளிக்க வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal