தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி நடந்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
நாடு முழுதும், லோக்சபா தொகுதிகள், அடுத்த ஆண்டு மறுவரையறை செய்யப்பட உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில், இப்பணிகள் நடந்தால், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், எட்டு தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஆனாலும், தொகுதி மறுவரையறையின் போது, தமிழகத்தில் உள்ள தொகுதிகள் எண்ணிக்கையில், பாதிப்பு ஏற்படக்கூடாது என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில், இன்று (மார்ச் 05) தலைமைச் செயலகத்தில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். ஏற்கனவே, கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க., த.வெ.க., அ.ம.மு.க., என மொத்தம் 56 கட்சிகள் பங்கேற்றுள்ளன. பா.ஜ.க, த.மா.க., நாம் தமிழர் கட்சி புறக்கணித்துள்ளன. தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகிறது.