‘‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், ‘‘தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக நாங்கள் எப்போது கூறினோம்?’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. தேவையின்றி யார் யாரோ சொல்வதை வைத்து என்னிடம் கேட்க வேண்டாம். தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் என்று நாங்கள் சொன்னோமா? என எடப்பாடி கேள்வி எழுப்பினார். தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தர ஒப்பந்தம் போடப்பட்டதாக பிரேமலதா கூறியிருந்த நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வை நம்பி தே.மு.தி.க. ஏமாந்து போனதுதான் மிச்சம்… அதுவும் எடப்பாடியின் பேச்சை போய் நம்பலாமா? என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!