கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு-க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தினர். இந்த பரபரப்பை அடங்குவதற்குள் எடப்பாடியின் உறவினர் வீட்டில் இன்றைக்கு வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, ஈரோட்டில் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன்ஸ்ட்ரக்சன் மற்றும் மெட்டல் நிறுனவனத்திற்கு சொந்தமான 6க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் 26 இடங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமலாக்கத்துறை சோதனை, வருமான வரித்துறை சோதனை என புலனாய்வு நிறுவனங்களில் சோதனைகளால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் திக்கு முக்காடிப் போயுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal