சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாளில் வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியருக்கிறது.

பேரவை விதிகளின்படி, கடைசி சட்டசபை கூட்டம் நடந்து முடிந்ததிலிருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் அவை கூட வேண்டும். முன்னதாக கடந்த ஜூன் மாதம் 10 நாட்கள் அவை கூட்டம் நடந்தது. இதனையடுத்து இன்று அவைக்கூட்டம் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் கூட்டம் நடைபெறுகிறது. இன்று அவை கூடியதும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. எம்எல்ஏக்கள் கேள்விகளை எழுப்ப தொடங்கினர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன், தன்னுடைய தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார். அதாவது, “கடந்த 4 ஆண்டுகளில் என்னுடைய பன்ருட்டி தொகுதியில் ஏராளமான மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிரக்கின்றன. அகன்டை, பெரிய பரண்டை, சின்ன பரண்டை, குமாரமங்கலம், பட்டாம்பாக்கம் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிரமாங்களில் மக்கள் வெள்ளம் காரணமா பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் மனு ஒன்றை கொடுத்திருந்தேன். அதில் தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் குறித்து கோரிக்கை வைத்திருந்தேன்.

அமைச்சரும் நடவடிக்கை எடுத்து துறைக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இப்பணி பாதியிலேயே நின்றிருக்கிறது. என்னுடைய தொகுதியில் துரைமுருகன் தலைமை வகிக்கும் பொதுப்பணித்துறை அமைச்சகம் சார்பில் இதுவரை எந்த நற்பணிகளும் நடைபெறவில்லை” என்று கூறியிருந்தார்.

இதற்கு உடனே குறிப்பிட்ட அவை தலைவர் அப்பாவு, “கேள்வி நேரம் என்பது கேள்விக்கானது மட்டுமே, குற்றச்சாட்டுகளுக்கானது அல்ல. எனுவே, இந்த குற்றச்சாட்டை அவை குறிப்பிலிருந்து நீக்கி விடலாம்” என்று கூறினார். உடனே பதிலளித்த வேல்முருகன், “செய்யவில்லை என்றால் செய்யவில்லை என்றுதானே சொல்ல முடியும்?” என்று கூறி தனது உரையை தொடங்கினார்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் வேல்முருகனும், அவை தலைவரும் மோதிக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal