நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு முடிந்து அவரது பேச்சு ஒரு மாதம் ஒலித்துக்கொண்டிருந்தது தமிழக அரசியல் களத்தில். அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது மூன்று நாட்களை கடந்து பேசு பொருளாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் அவ்வப்போது தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து பதிவிடும் அரசியல் விமர்சகர் மருது அழகுராஜ் ‘#ஒரே #ஒரு மணிநேரம்’ என்ற தலைப்பில் நடிகர் விஜய் குறித்து வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருப்பதுதான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

இது தொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்,

‘‘விக்கிரவாண்டி மாநாட்டுல ஒரு முக்கால் மணி நேரம்…

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுல ஒரு கால்மணி நேரம்…

ஆக மொத்தமா ஒரு மணி நேர செலவழிப்பிலேயே…

ஒரு கட்சி உடைப்பெடுக்கத் தொடங்கிடுச்சு…

இன்னொரு கட்சி கூட்டணியில விரிசல் விழுத் தொடங்கிடுச்சு…

இதுல அவரு மாநிலம் முழுவதும் சுத்தி வரும்போது…

பல கட்சியோட கை முதலே காணாமல் போகக்கூடும்…

என்ன நாஞ் சொல்றது..?’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal