தமிழகத்தில் 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்த, தேர்தலுக்கு முந்தய கருத்து கணிப்புகளும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் இந்த தேர்தலிலும் திமுக தான் வெற்றிபெறும் என அறிவித்திருந்தது.

எனவே, அரசியல் தலைவர்கள் பலரிடமும் இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் பற்றி தான் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” கருத்து கணிப்புகள் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. இன்னும் சொல்லப்போனால் 203 தொகுதிகளுக்கு மேலாக நாங்கள் 2011 ஆம் ஆண்டு அபரிமிதமான வெற்றியைப் பெற்றோம். அந்தத் தேர்தலில்க் கூடக் கருத்துக்கணிப்பு என்ன சொன்னார்கள்? அன்னைக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில ஆட்சி அதிகாரத்திலிருந்து தேர்தலைச் சந்தித்தார்கள்.

இப்பொழுது சந்தித்ததை போல ஆளுங்கட்சி திமுக தேர்தல் சந்தித்தது. நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தோம். அந்தக் கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்யாகி திமுக சட்டமன்றத்துக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தில் கூட வராமல் இருபத்து மூன்று வெறும் இருபத்து மூன்று இடங்களை பெற்று நாங்கள் இருநூற்று மூன்று இடங்களுக்கு அதிகமான இடங்களை மகத்தான அபரிமிதமான வெற்றியைப் பெற்று மான்முகயமா முதல்வராக வந்தார்.

அதே நிலைமையில்தான் இன்றைக்கு இருநூறு தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெற்று மான்முகயான எடப்பாடியார் தமிழகத்தின் பொற்கால முதல்வராக வருவது காலத்தின் கட்டாயம். இந்தக் கருத்துக்கணிப்பு எல்லாம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.

எங்களைப் பொறுத்தவரை 23 அன்னைக்கு தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற நேரத்துல மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள். என்ன தீர்ப்பு ன்னு சொன்னால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடி அரியணை ஸ்டாலின் Out. இதுதான் கருத்துக்கணிப்பு. நிதர்சனமாக வருகின்ற நாளாந்திரி வரக்கூடிய தீர்ப்பாக இருக்கப்போகிறது” எனவும் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal