நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

நேற்று நடந்த அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில், ‘‘ தி.மு.க. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள்” என்று பேசினார் விஜய்.

திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘நானும் இருமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளிலும் நிச்சயமாக திமுக வெற்றி பெறும்’’ என்று கனிமொழி பேசியுள்ளார்.

திமுக மாநில ஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்செந்தூர் ஐஎம்ஏ மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கனிமொழி எம்பி பேசியதாவது: ‘‘2026 தேர்தல் வெற்றி என்பது உங்களின் கரங்களில் இருக்கிறது என்ற அந்த கட்டுப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். அண்ணன் தளபதி சொன்னதுபோல், நிச்சயமாக நானும் சொல்கிறேன்… இருமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்… வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அண்ணனை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் என கிசுகிசுக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal