தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ‘தலைவனே… இளம் தலைவனே…!’ என மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் எழுதிய பாடலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்தப் பாடல் வரிகள் உடன் பிறப்புக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில் துணை முதலமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக திமுக இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரிகளில் எழுதிய தலைவனே, இளம் தலைவனே என்ற பாடலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘‘உதயநிதி ஸ்டாலின் எங்கள் அண்ணா என்ற பாடல் கேட்கும் பொழுது, அன்பகத்தில் தம்பிகள் உடன் பேசும் உணர்வு ஏற்படுகிறது. நாளை நவம்பர் 27 ம் தேதி பிறந்த நாள் கொண்டாட உள்ள உதயநிதி ஸ்டாலின் இப்போது Deputy cm நாளைக்குDefinitely cm என்று தெரிவித்தார்.
மேலும், எங்கும் உதயநிதி சிடு சிடு என்று இருக்க மாட்டார். சிரிப்புடன் தான் இருப்பார். இந்தியா முழுவதும் சில விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தும் நான் கலைஞர் பேரன் என்று நிரூபித்தவர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறினார்.
இன்றுள்ள இளைய சமுதாயத்தினற்கு நண்பர் போல உள்ளார். 75 ஆண்டுகளாக பல வெற்றி தோல்விகளை பார்த்து கடந்து நிற்கிறோம். இன்று நமக்கான சவால்கள் ஒன்றிய அரசு இடம் இருந்து வருகிறது. ஒரு பக்கம் நல்ல விமர்சனம் இருந்தாலும் ஒரு பக்கம் தேவையே இல்லாமல் திட்டுகிறார்கள். நாம் என்ன தவறு செய்தோம் பாவம் செய்தோம் என்று தெரியவில்லை.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்று பேசினார். சமூக வலைத்தளங்களில் பாராட்டுவது ஒரு புறம் இருக்க; சம்பந்தமே இல்லாத விமர்சனங்களும் வருகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு தப்பும் இளைஞரணி செயலாளரை பாதித்து விடக்கூடாது. கொள்கையின் அடிப்படையில் கவனமாக செயல்படவேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.