‘சாதனை திட்டங்களால் சாதனை நாயகராக மக்கள் மனதில் எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார். விடியா திமுக ஆட்சியில் வேதனையால் வேதனை நாயகனாக ஸ்டாலின் மக்கள் மனதில் உள்ளார்’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக மதுரை அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 53 ஆண்டு கால வரலாற்றில், 31 ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றி சாதனை திட்டங்களை வாரி வழங்கி சாதனை படைத்தது. ஆனால் திமுக 75 ஆண்டுகால வரலாற்றில், 25 ஆண்டுகள் தான் மக்கள் பணியாற்றி வருகிறது.
புரட்சித்தலைவரின் சத்துணவு திட்டம், புரட்சித்தலைவி அம்மாவின் தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கண்ணி திட்டம், அம்மா உணவகம், கிராமப்புற பொருளாதாரம் மேன்மை அடைய பெண்களுக்கு கறவைமாடுகள், ஆடுகள் திட்டம், அதேபோல் அம்மாவின் கனவு திட்டமான உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்தை மூன்று லட்சம் பெண்களுக்கு எடப்பாடியார் வழங்கினார். அதேபோல் கிராம மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க 2000 அம்மா மினி கிளினிக்கை உருவாக்கியவர் எடப்பாடியார்.
அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் 7.5 சகவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து, அதன் மூலம் ஆண்டுதோறும் 565க்கு மேற்பட்ட அரசு பள்ளி மாணவரின் மருத்துவ படிப்பை நினைவாக்கி, இதுவரை 3,800 பேர் பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் என்ற உன்னதமான நிலை அடைந்ததற்கு காரணம் எடப்பாடியார் என்ற சாதனை நாயகர் தான் இதற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு 6 பேருக்கு தான் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பு கிடைத்தது.
2 கோடி மேற்பட்ட குடும்பங்களுக்கு எந்த மாநிலம் இல்லாத வகையில் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கியவர் எடப்பாடியார், அதேபோல் 50 ஆண்டுகாலமாக இல்லாத வகையில் குடிமராமத் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தின் நீர் பரப்பளவை மூன்று சதவீதம் உயர்த்தியவர் எடப்பாடியார்.இது போன்ற மக்களுக்காக பல்வேறு சாதனை திட்டங்களை வாரி வழங்கியதால் மக்கள் மனதில் சாதனையின் நாயகராக எடப்பாடியார் உள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆகியோர் ஆட்சி காலங்களில் தமிழகம் அனைத்து துறையிலும் முதன்மையாக இருந்தது,குறிப்பாக சுகாதாரத் துறை என்பது இந்தியாவிற்கே வழிகாட்டு வகையில் திகழ்ந்தது, ஆனால் இன்றைக்கு பருவமழை காலங்களில் பரவும் காய்ச்சலை கூட கட்டுப்படுத்த முடியாத திராணி அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது
திமுக கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சகவீதம் கூட நிறைவேற்றவில்லை,ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் கடன் சுமை மூன்றரை லட்சம் கோடியாக உள்ளது அம்மா அரசின் திட்டங்களை எல்லா மூடு விழா கண்டுவிட்டது மட்டுமல்லாது, இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, பத்திரப்பதிவுத்துறை கட்டணம் உயர்வு, அரிசி விலை உயர்வு மளிகை பொருள் உயர்வு என விலைவாசி உயர்வினால் மக்களுக்கு வேதனையை தந்து விட்டு, இன்றைக்கு வேதனை நாயனாகத்தான் மக்கள் மனதில் ஸ்டாலின் உள்ளார்.திமுக செய்யும் அநீதிகளை நாள்தோறும் எடப்பாடியார் தோலுரித்து மக்களின் பாதுகாவலராக எடப்பாடி உள்ளார்
ஒரு விழாவில் திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார்,திமுகவை யாரும் அழிக்கவில்லை திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடால் தானாக அழிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு மக்கள் மனதில் எடப்பாடியாருக்கு ஆதரவு அலையும், ஸ்டாலினுக்கு எதிர்ப்பு அலை தான் உருவாகியுள்ளது, திமுகவிற்கு மக்கள் 2026 தேர்தலில் முடிவுரை எழுதுவார்கள். 2026 தேர்தலில் எடப்பாடியார் கோட்டைக்கும், ஸ்டாலின் வீட்டுக்கும் போவார்’’ என அதில் கூறியிருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டது.