இலங்கையின் இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியின் ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் 3வது பெண் பிரதமராவார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மத்தியில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் களம் கண்ட அனுரா குமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அந்நாட்டின் 9ஆவது அதிபராக நேற்று அவர் பதவியேற்று கொண்டார்.இந்நிலையில், புதிய அதிபர திஸாநாயக்கவினார்ல், புதிய அமைச்சரவையானது நியமிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி சார்பாக ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் , அவர் இன்று பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதையடுத்து, இலங்கையின் 3வது பெண் பிரதமராக உருவெடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக முதல் பெண் பிரதமரான ஸ்ரீரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமராக பதவி வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி பிறந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹரிணி அமரசூரிய. இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றினார்.

மேலும், இவர் இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆய்வுகளை செய்து, அது தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்து, அரசியலில் களமிறங்கினார்.

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் ஆய்வுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது பிரதமராக நியமனம் செய்யப்பட்டதன் மூலம், இலங்கையின் 3வது பிரதமராக அமரசூரிய பொறுப்பேற்றுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal