ஒரு தமிழன் பிரதமராக முடியுமா எனவும் அதற்கு தயாராக வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

” ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் எவ்வளவு ஆபத்தானது.!” அது தவறு என்பது உலகு அரசியலுக்கு தெரியும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தமிழன் பிரதமராக முடியுமா எனவும் அதற்கு தயாராக வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தில் 2வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் 21-&09&-2024 அன்று (சனிக்கிழமை) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு, மாநில நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதில் கமல்ஹாசன் மீண்டும் தலைவராக தேர்வு , வரவிருக்கும் தேர்தல்களைத் திறம்பட எதிர்கொள்ள பூத் கமிட்டி அத்தியாவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்தபட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும், போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறது. போதை வஸ்துக்களின் புழக்கமற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக ம.நீ.ம இருக்கிறது உள்ளிட்ட 16 பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து அவர் பேசுகையில், “வீரமும் நேர்மையும் இருக்கிறதா என்று என்னையே கேட்டுக் கொண்டவன் நான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நேர்மையானது. முறையாக வரி கட்டுகிறது. ‘‘ ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் எவ்வளவு ஆபத்தானது.!” அது தவறு என்பது உலகு அரசியலுக்கு தெரியும். ஜனநாயக பீடத்தை காக்க வேண்டும். இந்த பீடம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கும். தோல்வி என்பது நிரந்தரமானது இல்லை, பிரதமர் பதவியும் நிரந்தரமானதும் இல்லை என பேசினார். சாதித்துவிட்டேன் என்று கூறவில்லை. முடியும் என்றும் கூறுகிறேன்.

ஒரு தமிழன் பிரதமராக முடியுமா எனவும் அதற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பு இவ்வாறு நான் கூறியபோது சிலர் தவறாக புரிந்து கொண்டனர் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal