ஹேமா கமிஷன் அறிக்கையின் மூலம் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த திரைத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த நிலையில்தான் நடிகை ராதிகா சரத்குமார், கேரவனில் ரகசிய கேமராவை வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்து ரசிப்பதாக அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

பல வெற்றிப்படத்தை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த மலையாள சினிமா. ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் தலைகுனித்துள்ளது. 2017ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப், ஒரு நடிகையை காருக்குள் வைத்து வன்கொடுமை செய்தார். இது உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல முன்னணி நடிகைகள் எல்லாம் குரல் கொடுத்தத்தைத் தொடர்ந்து பிறகுதான் ஓய்வு பெற்ற ஒரு பெண் நீதிபதி தலையில் ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.

அந்த கமிஷன் முன்பு பல பெண்கள் நேரில் வந்து ஆஜராகி புகார் கொடுக்கிறார்கள். இதைதொடர்ந்து 2019ம் ஆண்டு ஹேமா கமிஷன் 239 பக்கம் கொண்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து பேட்டி அளித்த ராதிகா சரத்குமார், ‘‘நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து இடத்திலும் உள்ளது. பெண்கள் விரும்பி காதலிக்கிறார்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், பட வாய்ப்புக்காக அவர்களை நிர்பந்தம் செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்சனைக்கு இதுவரை பெண்கள் தான் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆண் நடிகர்கள் யாரும் இதுகுறித்து வாய் திறக்கவே இல்லை’’ என்றார்.

அடுத்து ராதிகா சொன்னதுதான் அதிர்ச்சி ரகம், ‘‘ மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள். நான் அதைப்பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டேன். பின், அதுகுறித்து விசாரித்த போது தான், அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எனக்கு தெரிந்தது.

இதனால், நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். இது குறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன். அதன் பிறகு கேரவன் ஆட்களை அழைத்து செருப்பால் அடிப்பேன், கேரவனுக்குள் கேமரா வந்தால் அவ்வளவு தான் என்று சொன்னேன். அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை. அந்த நடிகை உடை மாற்றும் வீடியோ தற்போதும் இணையத்தில் பெயரோடு வருகிறது. இங்கு சினிமாவில் சிஸ்டமே தவறாக இருக்கிறது. சினிமாவை பற்றி தானே தவறாக சொல்லுவது, நம்மை பார்த்து நாமே துப்பிக்கொள்வதற்கு சமம்’’ என்று ராதிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கேரவனில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததை பார்த்ததாக கூறியது பெரும் புயலை கிளப்பி உள்ளது. இப்படி ஒரு மோசமான சம்பவத்தை பார்த்த ராதிகா சரத்குமார், இதுவரை இதை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்தது ஏன் என டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.

மிகவும் செல்வாக்கு மிக்க ராதிகா, இந்த சம்பவம் குறித்து முன்பே குரல் கொடுத்து இருக்க வேண்டும். அவரது மௌனம் இது போன்ற குற்றங்கள் தொடர வாய்ப்பளித்துவிட்டது என பாக்யலட்சுமி அளித்த பேட்டியில் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal