பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அம்ஸ்ட்ராங் இறந்தது முதல் இறுதிச் சடங்குவரை உடன் இருந்த பா.ராஞ்தி, நள்ளிரவில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதன் மூலம் அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராகிறாரா என்ற கேள்வியை எழ வைத்திருக்கிறது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ரவுடி கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆமஸ்ட்டராங் இறப்புச் செய்தி கேட்டு முதல் ஆளாக ஓடி வந்த இயக்குனர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங்க் முகத்தை கண்டதும் கதறி அழத் தொடங்கினார்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த ஆம்ஸ்ட்ராங், டாக்டர் அம்பேத்கரிய கொள்கைகளில் ஆர்வம் கொண்டு தீவிர அரசியலில் நுழைந்தார். பின்னர், 2000 ஆண்டு தொடக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சென்னை அமைந்கரையில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியுடன் இணைத்துக் கொண்டார். அதற்கு பிறகு சுமார் 17 ஆண்டுகளாக தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக பதவி வகித்து வந்தார்.
ஏழைஎளிய மக்கள் நலனில் அக்கரை கொண்ட ஆம்ஸ்ட்ராங், நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கியிருக்கிறார். இதுவே மக்கள் மத்தியில் அவரை கவனம் பெற வைத்தது. இதன் காரணமாக சுயேட்சையாக போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங் சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் படு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை முதல் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை இயக்குனர் பா. ரஞ்சித் கண்ணீர் மல்கவே காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருமே அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு களத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.