ஐஜேகே எனும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சிட்டிங் எம்பியாக பெரம்பலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பாரிவேந்தர் களமிறங்கினார். அதேபோல் அவரை எதிர்த்து அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்டார். இந்த தேர்தலில் அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு அமோக வெற்றி பெற்றார். அருண் நேரு 6,03,209 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 2,14,102 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். சிட்டிங் எம்பியாக களமிறங்கிய பாரிவேந்தருக்கு 3வது இடம் தான் கிடைத்தது. அவர் 1,61,866 ஓட்டுகள் பெற்றார்.

இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து தான் பாரிவேந்தருக்கு அடுத்த அதிர்ச்சி கிடைத்துள்ளது. அதாவது அவரது கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயசீலன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தரை வெற்றி பெற வைக்க ஜெயசீலன் பணியாற்றினார். ஆனால் லோக்சபா தேர்தலில் ஜெயசீலனுக்கு 3வது இடம் தான் கிடைத்தது.

இந்நிலையில் தான் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெயசீலன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐஜேகே தோல்வியுற்றதற்கு முழு பொறுப்பேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜெயசீலன் ராஜினாமாவுக்கு வேறு சில காரணங்களையும் கூறுகின்றனர். அதாவது, அருண் நேருவுக்கு இணையாக விட்டமினை இறக்கியிருக்கிறார் பாரிவேந்தர். ஆனாலும், அவரால் இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. ஆனால், பணமே கொடுக்காமல் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டார் சந்திரமோகன். தவிர, பாரிவேந்தர் கொடுத்த விட்டமினை பலர் அப்படியே ‘அமுக்கி’விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் ஜெயசீலன் ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal