2021ல் ஸ்டாலினுக்கு ‘கட்டம் சரியில்லை’ முதல்வராக முடியாது என அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். ஆருடங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’ என்று கூறி பதவியேற்ற போது அனைவரும் வியர்ந்து பார்த்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் உச்ச நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற பேச்சுக்கள் தொடர்ச்சியாக அடிபட்டு வருகிறது. தவிர, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஸ்டாலினால் ஆட்சியமைக்க முடியாது என்று தற்போது கூறி வருகிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில்தான், ‘‘ #மே….# நான்கு’’ எனும் தலைப்பில் தி.மு.க. கொள்கை பரப்புத் துணைத் தலைவர் மருது அழகுராஜ் அவர்கள்,
‘‘ஏப்ரல் -23ல் நம்
ஆட்காட்டி விரலில் வைத்த
அடையாள மை
“அடிமை அறியாமை
ஆளுமை” எனும்
முப்பரிமாண மோதலாக முடிந்திருக்கிறது என்றாலும்…
நிழலையும் நிஜத்தையும்
பிரித்துப் பார்க்கத் தெரியாத
சினிமா மோகம் எனும் விதிவிலக்கை கடந்து…
தமிழ் மக்களின் அரசியல் முதிர்ச்சிக்கு
மகுடம் சூட்டுகிற மகோன்னத நாளாக
மே-4 திகழப் போகிறது..!’’ என பதிவிட்டிருக்கிறார்.
இன்னும் ஒருநாள் பொறுத்திருந்து பார்ப்போம்..!
