தாயுடனான கள்ளக்காதலை விவசாயி தொடர்ந்ததால், மகன் செய்த சம்பவம்தான் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடியும் என்றும் தெரிந்தே, அல்பஆசையில் பலர் தங்களது உயிரைக் கொடுத்துவிடுகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதியில் கடந்த ஜூன் 26ம் தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் இடுபட்டிருந்த போது மனித எலும்புக்கூடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எலும்புக்கூட்டினை கைப்பற்றி ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் எலும்புக்கூட்டை ஆய்வு செய்ததில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடலின் எலும்புக்கூடு என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தொட்டபுரத்தை சேர்ந்த விவசாயி குமார் (40) என்பதும் இவரை நாகமல்லு (26), முத்துமணி (43), மாதேவன் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்து வனப்பகுதியில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில், குமாருக்கும், முத்துமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த முத்துமணியின் மகன் நாகமல்லு குமாரை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 26ம் தேதி முத்துமணியுடன் குமார் தனது வீட்டில் இருப்பதை நாகமல்லு பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் உறவினர் மாதேவனை வரவழைத்து இருவரும் சேர்ந்து சுத்தியலால் குமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து நாகமல்லு, முத்துமணி, மாதேவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து குமாரின் உடலை இரவோடு இரவாக அடர்ந்த வனப்பகுதிக்குள் வீசியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal