நடிகை கௌதமி முதல் முறையாக, ரிலேஷன் ஷிப் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை கௌதமி. ஆந்திராவைச் சேர்ந்த இவர், தெலுங்கில் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கி இருந்தாலும்… இவருக்கு பல வெற்றி படங்களை கொடுத்து அரவணைத்தது தமிழ் சினிமா தான்.
தமிழில் இவர் 1988 ஆம் ஆண்டு வெளியான ‘குரு சிஷ்யன்’ படத்தில் அறிமுகமான கௌதமி, தன்னுடைய முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதை தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், ரத்த தானம், நம்ப ஊரு நாயகன், அபூர்வ சகோதரர்கள், ராஜா ராஜா தான், போன்ற பல படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என பல மொழிகளில் படு பிஸியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த நடிகை கௌதமி… முன்னணி நடிகையாக இருக்கும்போதே, தன்னுடைய காதலர் சந்தீப் பாத்தியா என்பவரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே வருடத்தில் இருவருக்கிடையையும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்தில் முடிந்தது.
ஒரே வருடத்தில் ஒரு குழந்தைக்கும் தாயான கௌதமி, தன்னுடைய மகளுடன் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்தார். ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சீரியல்களிலும் நடிக்க துவங்கினார். சின்னத்திரையில் கவனம் செலுத்தி வந்த போது தான், திடீர் என மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் கௌதமிக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய முன்னாள் காதலரான நடிகர் கமல்ஹாசன் தான். கமல்ஹாசனும் கௌதமியும் ‘தேவர் மகன்’ படத்தில் இணைந்து நடித்தபோது ஒருவரை ஒருவர் காதலித்ததாக கூறப்பட்டது. எனினும் கமல்ஹாசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதால் இருவரும் பிரிந்து பிரிந்ததாகவும் கூறப்பட்டது .
கௌதமியை அக்கறையோடு கமல் கவனித்து கொண்டதோடு, இருவரும் பல வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். பின்னர் யாரும் எதிர்பார்த்திராத சமயத்தில் திடீரென கமலஹாசனை விட்டு பிரிவதாக கௌதமி சமூக வலைதளத்தின் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தார். தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி பிரிவதாக மட்டுமே தெரிவித்திருந்தார். இதனால் பல்வேறு வதந்திகள் உலா வந்தன.
இந்நிலையில் கௌதமி, முதல் முறையாக ரிலேஷன்ஷிப் குறித்து பேட்டி ஒன்று பேசி உள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது அந்த ரிலேஷன்ஷிப் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அதற்கான அனைத்து பொறுப்புகளையும் நீங்கள் தான் எடுக்க வேண்டும் என்பது தேவையில்லை.
இருவருக்கிடையேயான அன்பு, அர்ப்பணிப்பு, உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும். எந்த விதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதற்கு இடையே ஒரு மையப்புள்ளி கண்டிப்பாக இருக்கும். இரண்டு பேர் இருக்கும் ரிலேஷன்ஷிப்பில் 50 சதவீதத்தை கண்டிப்பாக தாண்டக்கூடாது. இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன் என கௌதமி கூறியுள்ளார். எனவே ரசிகர்கள் பலர் உங்களுக்கும் கமல்ஹாசன் பிரிவு வர இந்த இதுதான் காரணமா? என தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கௌதமி தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பாடமாக கற்றுக் கொண்டேன் எனக் கூறியுள்ளதால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.