முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரை பிரிந்து வாழும் மனைவியும் முன்னாள் சுகாதாரத்துறை செயலருமான பீலா அளித்த புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை தையூரில் அவரது பண்ணை வீட்டிற்குள் ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்த ராஜேஸ்தாஸ், காவலாளியை தாக்கியதாக பீலா, கேளம்பாக்கம் போலீசில் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் 3 பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். ராஜேஷ்தாஸ் மீது ஏற்கனவே பெண் போலீஸ் எஸ்பி ஒருவர் பாலியல் தொல்லை அளித்தார் என புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடக்தக்கது.