மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சியை விட, பா.ஜ.க, என்ற கட்சி தனியாக அதிக ஓட்டுகளை பெற்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

‘‘தமிழர்களை திருடர்கள் போல சித்தரித்து பேசுகிறார் மோடி. இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்பே பேசியிருக்க வேண்டியதுதானே!. தென் மாநிலங்களில் பா.ஜ., தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை பேசுகிறார். அவர், தனித்து நின்று போட்டியிட்டு காட்டட்டும்.

ஜூன் 4ல் வெளியாகும் லோக்சபா தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க, என்ற தனிக்கட்சியாக பெற்ற ஓட்டுகள், நாம் தமிழர் கட்சியை விட கூடுதலாக பெற்றால், நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன். யார் பெரிய கட்சி என்பது அப்போது தெரியும். அவர்களின் கூட்டணியாக ஓட்டை கணக்கிடக்கூடாது’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal