அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க இருப்பது தொடர்பாக வெளியான தகவலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆ,ர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘‘‘இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சேர்க்கத் திட்டம் என்பதாகவும், திரைமறைவில் நடக்கும் ரகசிய முயற்சிகள் என தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வருகிறது. இந்த தகவல் எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பத்திரிக்கையினுடைய பரபரப்புக்காக பல்வேறு தகவல்களை பத்திரிகைகளும் ஊடகங்களிலும் வெளியிட்டு வருகின்றார்.
மேலும் அதிமுக மூத்த கழக நிர்வாகிகள் இடத்தில் கருத்து வேறுபாடு கூட்டணி அமைப்பதிலும், களம் காண்பதில் தேர்தல் பணி ஆற்றுவதில் இருந்து அவர்களாக ஒரு கற்பனை செய்து கொண்டு அவர்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டே வருகின்றார்கள். அதற்கு உரியவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் கூட மறுப்பு தெரிவித்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் பரபரப்பு செய்திகளுக்கு மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அம்மாவுடைய (ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு முதன் முதலில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற ஒரு சூழ்நிலை வந்தவுடன் பிரிவுக்காக முதன்முதலாக பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர் செல்வம். உயிரைக் கொடுத்து உருவாக்கிய அரசை காப்பாற்றுவதற்கு நம்பிக்கை தீர்மானம் சட்டமன்றத்தில் முன்வைத்த போது அதில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக வாக்களித்தாலும் கட்சியினுடைய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கருதி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டு அவருக்கு கட்சியிலே மிக உயர்ந்த பொறுப்பான பொதுச் செயலாளர் அந்தஸ்துலான பொறுப்பு வழங்கப்பட்டது.
முதலமைச்சர் பதவிக்கு இணையான துணை முதலமைச்சர் பதவியும் வீட்டு வசதி வாரியத் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. அதிமுகவில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம் ஒன்று அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவிப்பார். அல்லது மவுனம் சாதிப்பார். இதனால் கட்சினுடைய வளர்ச்சி நடவடிக்கை வரலாறு காணாத வகையிலே பின்தங்கி இருந்ததை நாம் பார்த்தோம்.
ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் இரட்டை இலை எத்தனை தொகுதி அங்கே வெற்றி பெற்றிருக்கிறது. அவர் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதியை தவிர நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதி தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது.
சின்ன குழந்தையிடம் கேட்டால் அண்ணா டிஎம்கே என்று சொல்வதோடு சேர்த்து ஆன்ட்டி டி எம் கே என்றுதான் கூறுவார்கள். ஆனால் திமுகவிற்கு ஆதரவான கருத்துகளை பேசுவதை தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள். மேலும் அதிமுக அலுவலகத்தை உடைத்து கபளிகரம் செய்தார்.
நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு, ஒற்றை சீட்டுக்காக அதிமுகவை தோல்வி அடைய செய்ய ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். அமைதி காக்காமல் அதிமுகவை சின்னாபின்னாமாக்க முயன்றார். இப்படிப்பட்ட நிலையில், மீண்டும் விஷப்பரிச்சைக்கு அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. தொண்டர்கள் விருப்பத்தை தான் செயல்படுத்துவார்கள்.
செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பற்றி தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். எந்த காலத்திலும் ஓபிஎஸ்யை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்த வித உண்மையும், எந்த வித ரகசிய பேச்சும் நடத்தவில்லை. இதனை அழுத்தம் திருத்தத்தோடு எடப்பாடியாரின் உத்தரவோடு தெரிவித்துக்கொள்கிறேன்’’ என ஆர்.பி,.உதயகுமார் தெரிவித்துள்ளார்.