மனைவியின் தங்கையின் அழகில் மயங்கி மச்சினிச்சியையும் திருமணம் செய்து கொண்ட வாலிபர், மச்சினிச்சி வேறொருவருடன் கள்ளக் தொடர்பில் இருப்பதை கண்டித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம்தான் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் முதுநகர் அருகே உள்ளது சோனங்குப்பம். இங்கு வசித்து வருபவர் ரமேஷ். 37 வயதாகிறது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பெயர் இந்துமதி.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆனால் ரமேஷ், இந்துமதியின் தங்கை சூர்யாவின் அழகில் மயங்கினார். ஒருகட்டத்தில் சூர்யாவையும் 2வதாக கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதற்கு பிறகும் ரமேஷ் தொடர்ந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இப்போது 33 வயதாகும் சூர்யாவுக்கு, முதுநகரில் இன்னொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, அது கள்ளக்காதல் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளிநாட்டிலிருக்கும் ரமேஷூக்கு தெரியவந்துள்ளது. இதனால் சூர்யாவுக்கு போன் செய்த ரமேஷ், பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனாலும், சூர்யா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று தெரிகிறது.

இதற்கு பிறகு, ரமேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது, சொந்தக்காரர்களிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றார். பிறகு அவர்கள் அனைவரும் சமாதானம் பேசி, சூர்யாவை ரமேஷூடன ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

குடும்பத்தினர் அறிவுறுத்தியதால், கடலூர் முதுநகரிலேயே ஒரு வீட்டில் சூர்யாவும், ரமேஷும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனாலும், இவர்களுக்குள் தகராறு அடங்கவில்லை. நேற்று சூர்யாவுக்கும் ரமேஷுக்கும் கடுமையான சண்டை நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், கிச்சனிலிருந்த கத்தியை எடுத்து வந்து, சூர்யாவை கண்மூடித்தனமாக வெட்டினார்.. ரத்த வெள்ளத்தில் சரிந்து, சூர்யா உயிரிழந்தார். இதைப்பார்த்ததுமே ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கு பிறகு, கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் விரைந்து வந்து, சூர்யாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்ய கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ரமேஷ் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை தேடி கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal