தமிழகத்தில் NDA கூட்டணியில் சிறப்பு அழைப்பிதழின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் எம்.பி பங்கேற்பு.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தனது வேட்பு மனுவை தற்போது தாக்கல் செய்தார்கள். கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தற்போது களமிறங்கியுள்ளார்.

பிரதமர் திரு மோடி அவர்களின் வேட்பு மனு தாக்கலின் போது,  மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பாஜக தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா  ஆகியோரும் தமிழகத்திலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில், சிறப்பு அழைப்பிதழின் பேரில், கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் எம்.பி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal