தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2ம் தேதி மறுதேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பாடவாரியாக தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31% உடன் முதலிடத்தில் உள்ளது. 82.07 சதவீதத்துடன் வேலூர் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.தலைநகர் சென்னை 88.21 சதவீதத்துடன் 30வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.