தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன்; அதேநேரம் இப்போதைக்கு சினிமாவை விட்டு வெளியே வரமுடியாது என்று மண்டி பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா கூறினார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் தீவிர தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டதால், இப்போதைக்கு என்னால் இண்டஸ்ட்ரியை விட்டு வெளியேற முடியாது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால், சினிமாவில் நடிக்க மாட்டேன். அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவேன்’ என்றார்.