நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா.. இந்த ஆண்டு, +12 பொது தேர்வு எழுதியுள்ள நிலையில் இவரது மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், பலரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு… அன்னியோன்னியமாக வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒன்னு சூர்யா – ஜோதிகா ஜோடி. பல வருடங்களாக மும்பையை சேர்ந்த நடிகை ஜோதிகாவை காதலித்து வந்த சூர்யா, அவருக்காக வீட்டில் சண்டைபோட்டு… பிடிவாதமாக இருந்து பெற்றோர் சம்மதத்துடன் 2007- ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமானதும் திரையுலகை விட்டு ஒதுங்கிய ஜோதிகா, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் மீண்டும் தன்னுடைய நடிப்பு கேரியரில் கவனம் செலுத்த துவங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தன்னுடைய கணவர் சூர்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மும்பைக்கே சென்று செட்டில் ஆனார் ஜோ.

மும்பைக்கு சென்ற பின்னர், பாலிவுட் படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ஜோ. அதே போல், தன்னுடைய பிள்ளைகள் இருவரையும், மும்பையில் உள்ள பல கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் படிக்கும் திருபாய் அம்பானி பள்ளியில் தான் படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு, நடிகை ஜோதிகாவின் மகள் தியா பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்த நிலையில், இவரது மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அதாவது தியா, 600 மதிப்பெண்களுக்கு, 581 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழ் -96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும், கணக்கு -94 மதிப்பெண்களும், பிசிக்ஸ் -99 மதிப்பெண்ணும், கெமிஸ்ட்ரி -98 மதிப்பெண்ணும், கம்பியூட்டர் சயின்ஸ் 97 மதிப்பெண்களை எடுத்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் சூர்யாவின் மகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal