தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்தோடு காணப்படுகிறது. அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்கத்தின் விலை உயர்வை கண்டும் அதிர்ச்சி  அடைந்தனர். தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ என்ற ஏக்கம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை தொற்றிக்கொண்டது.

தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து கிராம் ரூ.6 ஆயிரத்து 615-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 86 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal