இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய மக்களின் சொத்துகளை, நிலங்களை, ஆபரணங்களை பறித்து முஸ்லிம்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எங்கே கூறியிருக்கிறது. இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி பேசும் பொய் பேச்சாக அல்லவா மோடியின் பேச்சு இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமே பகிர்ந்தளிக்க மன்மோகன்சிங் அரசு முயன்றது என்று பிரதமர் மோடி இப்போது குற்றம் சுமத்தி பேசுவது எத்தகைய வடிகட்டின பொய் என்பதை நாடு அறியும். உண்மையை மறைத்து பொய்பந்தல் போட்டு தேர்தல் பிரசாரம் செய்யும் பிரதமர், நாட்டு மக்களை ஏமாற்றி, மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் பிரதமர் மோடிக்கு இந்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் கற்பிப்பர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது, நாட்டு மக்களா நம்ப போகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal