தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார்.
30-ந்தேதி ஜாகீராபாத் தொகுதியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அன்று மாலை ஸ்ரீரங்கம் பள்ளி தொகுதியில் ஐடி ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார். மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.