பிரதமர் மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப மாட்டார்கள் என்று ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஒன்றிய அமைச்சரும், மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதி பாஜக வேட்பாளருமான நாராயண ரானே, சிந்துதுர்க்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ‘சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது கட்சி எம்பி சஞ்சய் ராவுத் ஆகியோர் மோடியை தொடர்ந்து விமர்சிக்கின்றனர்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை. சிந்துதுர்க்கில் அவர்கள் பேரணி நடத்துவதாக அறிந்தேன். அவ்வாறு பேரணி நடத்துவது அவர்களது ஜனநாயக உரிமை. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கெட்ட வார்த்தையை பயன்படுத்தி பேசினால், அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப மாட்டார்கள். கொரோனா காலத்தில் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே, கொரோனா தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து 15% கமிஷன் பெற முயன்றார்’ என்று பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal