திருச்சி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் வேடமணிந்து சிறுவன் வாக்கு சேகரித்ததுதான் அ.தி.மு.க.வினரையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையோட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தினந்தோறும் வாக்குகளை சேகரித்து வருகிறார். மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற சாதனைகளையும் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை பிரச்சாரம் செய்யாத இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா நேற்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின் போது ஒரு சிறுவன் குட்டி எம்.ஜி.ஆர். வேடம் அணிந்து பிரச்சார வாகனத்தில் சென்றபடி வேட்பாளர் கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் வழி நெடுகிழும் குட்டி எம்.ஜி.ஆரைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

இந்த பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் ரெத்தினவேல், மனோகரன், இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal