பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார். நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.