தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் என்ன தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் அங்கு பாஜக தான் அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்று ஏபிபி சிவோட்டர்ஸ் சர்வேயில் தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஏபிபி மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அங்கு பாஜக தான் அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே 23 இடங்களில் பாஜகவின் என்டிஏ கூட்டணி வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது பாஜக மட்டும் அங்கு 21 இடங்களிலும் ஜேடிஎஸ் அங்கு 2 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் அங்கு வெறும் 5 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மோடி அலை வீசுவதாக கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகிவுள்ள நிலையில் காங்கிரஸ் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal