மதுரையில் அ.தி.மு-.க. வேட்பாளர் சரவணனும், தேனியில் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனும் தேர்தல் களத்தில் முந்திச் செல்வராக வந்த தகவலின் அடிப்படையில், தி.மு.க. தலைமை தொகுதி பொறுப்பு அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி மதுரை மற்றும் தேனி தொகுதியில் உள்ள நடுநிலையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மூன்று முறை எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவிட்டார். மதுரை அ.தி.மு.க.வில் நடக்கும் உள்ளடி வேலைகளையும் கண்டித்ததோடு, சரவணனை வெற்றி பெற வைக்காவிட்டால் கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பிறகும் அ.தி.மு.க. நிர்வாகிகள் களப்பணியாற்ற ஆரம்பித்துவிட்டனர்.

சரவணனை எதிர்த்துப் தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு செல்லும் சில இடங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. தவிர, நடைபாதையில் உள்ள காய்கறி வியாபாரிகளிடம் இதுவரை யாரும்நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி சிவகங்ககை பிரச்சாரத்தை முடிந்துவிட்டு வியாபாரிகளிம் வாக்கு கேட்டார். இந்த பிரச்சாரம் எல்லாம் டாக்டர் சரவணனுக்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது.

அதே போல், தேனியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவரது மனைவி அனுராதா தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு அங்குள்ள பெண்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ‘அண்ணே எம்.பி.தான்… நீங்க கவலைப்படாம போங்க…!’ என பெண்கள் டி.டி.வி.தினகரன் மனைவியிடம் உத்தரவாதமே கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே, தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என சவால் விட்டிருந்தார் அமைச்சர் மூர்த்தி. இந்த நிலையில்தான் தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரன் முந்திச் செல்வதாக தி.மு.க. தலைமைக்கு தகவல் சென்றிருக்கிறது. இதனால், தி.மு.க. ‘விட்டமினை’ வேட்பாளர்களுக்கு இறக்கத் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் வருமான வரித்துறையும் விட்டமினை பிடிக்க காத்திருக்கிறது’’ என்றனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறைப் போல ‘விட்டமினை’ அவ்வளவு எளிதாக இறக்க ‘மேலிடம்’ விடாது… வருமான வரித்துறை மூலம் முடிந்தளவிற்கு முட்டுக்கட்டு போடும் என்கிறார்கள் உயரதிகாரிகள் வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal