நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது. பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது.

காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண் தந்துள்ளது.
எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன். தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை  இந்தியாவில் உள்ள மற்ற எந்த மொழிகளை விட தமிழ் ஒன்றும் குறைந்தது இல்லை. தமிழ் என்பது மொழி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை.  தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே பார்க்கிறேன்.

மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம். அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும். பிரதமர் மோடி மீனவர்களை மறந்துவிட்டார். விவசாயிகளைப் போல மீனவர்களும் முக்கியமானவர்களே.
உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது என தெரிவித்தார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal