அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜீ.வி.கஜேந்திரனை ஆதரித்து ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதையடுத்து மாலை 6.30 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்காக பிராமண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆரணி, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
