திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரைக்கு ஆதரவாக தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி. இப்போதும் சுற்றுலாத் துறையிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள். அதற்கு விடமாட்டோம். அ.தி.மு.க.விடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வரவிடாதீர்கள். எப்படியாவது முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள் 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal