ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது.

நாட்டையும், ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி அழித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, அவர்களை கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது. அனைத்து இடங்களிலும் அநீதி என்ற இருள் நிலவுகிறது. இதற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும் என தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal