பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கில் எதிர்வரும் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இது மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணி வருகிறது.
கடந்த 2016-ல் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகமெங்கும் அதிர்ச்சியையும், சலசலப்பையும், உண்டுபண்ணிய வழக்காகும். தனியார் கல்லூரியில் படித்த மாணவிகளை, அந்த கல்லூரியின் பேராசிரியரான நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்ததுதான் முக்கிய குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த முயன்றபோதுதான், பல பூதாகரமான தகவல்கள் வெடித்து கிளம்பின.
அதிலும், சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலா தேவி தந்திருந்த வாக்குமூலத்தில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றி தந்திருந்த வாக்குமூலமானது, தமிழக மக்களையே அதிர வைத்தது. குறிப்பாக, ‘‘தேவாங்கர் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியில் இருந்தபோது, கடந்த 2011-ல் கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து அவருடன் பழக்கம் ஏற்பட்டு உல்லாசம் அனுபவித்தாக நிர்மலா தேவி கூறியிருந்தார்.
2016-ல் தேவாங்கர் கல்லூரியின் முன்னாள் செயலாளர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடனும் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அவர் அவ்வப்போது பணம் கொடுத்து உதவியிருக்கிறார். பிறகு கணவரின் நண்பர்கள் 2 பேருடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். இதையறிந்த கணவர் நிர்மலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரடைந்த நிர்மலா தேவி , இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மறுபடியும சந்தித்து, 24 நாட்கள் பல இடங்களுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு அருப்புக்கோட்டை திரும்பியதாக தெரிவித்துள்ளார். இன்னொரு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நகைக்கடை அதிபருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன்’’ நிர்மலா தேவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதன் பிறகுதான் 2016-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு கல்லூரி விஷயமாக வந்திருக்கிறார்.. அங்கு அலுவலகத்தில் இருந்த ஒரு அதிகாரியுடன் மிக நெருக்கமாக பழகியபோது, கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்ற ஆசை வந்துவிட்டதாகவும், அருப்புக்கோட்யைச் சேர்ந்த எஸ்பிகே கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் வீட்டில் 2 முறை உல்லாசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மூலமாக நண்பரானவர்தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியர் முருகன்.. அவரிடம் 2017ல் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். முருகனின் நண்பர், கருப்பசாமியுடன் தொடர்பு ஏற்பட்டு, காரில் அருப்புக்கோட்டை சென்றபோது, காரை ஓரமாக நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே இருவரும் உல்லாசம் அனுபவித்தாக நிர்மலா தேவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதன் பிறகுதான் விஐவிக்களுக்கு மாணவிகளை சப்ளை செய்வது தொடர்பாக முருகன், கருப்பசாமி மற்றும் நிர்மலாதேவி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. ஆனால் இறுதியில் 3 பேருமே மாட்டிக் கொண்டு கம்பி எண்ணும் நிலைமைக்கு ஆளானார்கள்.
இதெல்லாம் நிர்மலா தேவியின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், கல்லூரியில் பயிலும் மாணவிகளையும் தவறான பாதைக்கு அழைத்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோவும் வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆடியோவில், நிர்மலா தேவி, மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியிருந்ததும் பதிவாகியிருந்தது. அந்த ஆடியோவில், மாணவிகளிடம் ஆசையை தூண்டி நிர்மலா தேவி பேசியபோது, அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் குறித்தும் பேசினார். இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியதே இந்த புள்ளியிலிருந்துதான்..
இப்படியான பரபரப்புகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. ‘‘நான் நிர்மலா தேவி முகத்தைகூட இதுவரை பார்த்தது இல்லை. என்னுடைய பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவைகூட என்னை அணுக முடியாது.. நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மை வெளிவரும் என்று தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அப்போதைய ஆளுநர் உறுதி தந்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. இதையடுத்து, இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டு, பேராசிரியை நிர்மலா, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை தமிழக காவல் துறை கைது செய்தது. அருப்புக்கோட்டை போலீஸார் இந்த வழக்கை நடத்தி வந்தனர்… இந்த வழக்கில் இன்னும் நிறைய பேருக்கு தொடர்பு இருப்பதாக பேராசிரியர் முருகன் அப்போதே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக மாணவிகளிடமும் ரகசிய விசாரணை நடைபெற்றது. இப்போது அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், வரும் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.