விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

*கே: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?
*ப: எல்லா இடங்களிலும் மக்கள் தங்களின் அன்பை உணர்த்துகிறார்கள். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள். வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

*கே: நீங்கள் பாரதிய ஜனதாவில் சேர்ந்தது ஏன்?
*ப: ஏன் சேரக்கூடாதா? பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?

*கே: தொகுதியில் உங்களுக்கு முக்கிய போட்டியாளர் யார்? *ப: போட்டியாளர்களை பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் எங்களின் போசனைகளை ஊக்குவிக்கவும், அதை மக்களிடையே பரப்பவும் முயற்சிக்கிறோம்.

*கே: எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடர்ந்து செயல்படுவீர்களா?
*ப: அதையெல்லாம் முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது தேர்தல் வெற்றியே ஒரே இலக்கு, என்றார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal