மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்ட வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்கள் மதுரை மக்கள்!

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இடையே வார்த்தை மோதல் தீவிரமடைந்துள்ளது.

ஆங்கில (தி இந்து) நாளிதழுக்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன், ‘‘சு.வெங்கடேசன் 2019ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை என்றும், எம்.பி நிதியை சரிவர பயன்படுத்தவில்லை. வெங்கடேசன் எம்.பி நிதிக்கான 17 கோடி ஒதுக்கீட்டில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை’’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய சு.வெங்கடேசன், ‘‘மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடியில் 16 கோடியே 96 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அநேகமாக 100 சதவீதம் ஒட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம்.

எனவே, நாங்கள் அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் அல்ல. ஆனால் தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்கும்” என அ.தி.மு.க. வேட்பாளரை மிரட்டும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் இந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் உள்ள நடுநிலையாளர்கள் சிலரிடம் பேசினோம். சார், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஐ.யில் எடுக்கப்பட்டுள்ள தகவலில், ‘‘2019ம் ஆண்டிலேயே, அதாவது இவர் எம்.பி.யான முதல்வர் வருஷத்திலேயே 16 வேலைகள் பெண்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மொத்தம் எடுக்கப்பட்ட 70 பணிகளில் 54 முடிக்கப்பட்டதாகவும், 16 பணிகள் முடியாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஒரு எம்.பி.யின் கடைசி வருடத்தில் பணிகள் முடிவடையாமல் இருந்தால் பரவாயில்லை. 2019ம் ஆண்டிலேயே இத்தனை பணிகளில் முடியாமல் இருப்பதை எங்கே போய்ச் சொல்ல…!

மேலும் ஒரு பணிக்காக ஒருவரிடம் காண்டிராக் கொடுத்து அவரிடம் கமிஷன் பெற்று பிறகு அந்தப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. கமிஷன் பெற்றவருக்கு வேறு பணியை கொடுத்துவிடுவதால், இக்குற்றச்சாட்டுகள் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்திருக்கிறது.

இவர் வேட்பு மனு தாக்கலில் தான் 12ம் வகுப்பு படித்திருப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால், வெளியில் பி.காம். படித்திருப்பதாகச் சொல்லி வருகிறாராம். இப்படி தன் படிப்பிலேயே பொய்ச் சொல்லும் சு.வெங்கடேசன், தனது மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்ட வேலைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யாக இருந்துகொண்டு திரைத்துறையில் அதீத ஆர்வத்தைக் கொண்டவராக இருக்கிறார்! அந்த ஆர்வத்தை மக்கள் பணியில் காட்டவேண்டும் எம்.பி., சு.வெங்கடேசன்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal