மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வேங்கடேசனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது : “543 தொகுதிக்கே 3 மாசம் தேர்தல் நடத்துனா.. அப்ப மொத்த நாட்டுக்கும் ஒன்னா தேர்தல் நடத்த உங்களுக்கு 2 வருஷம் ஆகிடும்” என்று ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஊழலுக்கும் பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாஜகவில் இணைந்த 25 எதிர்க்கட்சி தலைவர்களின் வழக்குகள் காணாமல் போய்விட்டன; பணமும் அதிகாரமும்தான் முக்கியம் என பாஜக உள்ளது வடமாநிலங்களில் கூட பணம்… பணம் என்று ஒற்றை இலக்கு வைத்திருக்கிற பா.ஜ.,வை அந்த மக்கள் புரிந்து கொண்டனர். மீண்டும் ஒருமுறை அவர்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்” இவ்வாறு தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal