தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று 102 டிகிரி வெயில் கொளுத்தி. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தி மற்றும் ஈரோட்டில், 41 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூர், திருத்தணி, கோவை, 38; திருப்பத்துார், மதுரை, சேலம், வேலுார், 39; தர்மபுரி, திருச்சி, 40 டிகிரி செல்ஷியஸ் என, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நுங்கம்பாக்கம், கடலுார், பாளையங்கோட் டை புதுச்சேரி, 36; நாகை, கன்னியாகுமரி, 35; துாத்துக்குடி, 33; ஊட்டி, 28 மற்றும் கொடைக்கானல், 22 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
சென்னையின் புறநகரான மீனம்பாக்கத்தில், கோடை வெப்பநிலை, நேற்று ஒரே நாளில், 38 டிகிரி செல்ஷியசான, 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. தமிழகம், புதுச்சேரியில் கோடை வெயில் தீவிரமாக உள்ளது. தினமும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகிறது. அதேநேரம், கோடை மழையும் ஆங்காங்கே பெய்கிறது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திற்பரப்பில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது. பாம்பன், சுருளக்கோடு, 3; சிற்றாறு, 2; தங்கச்சி மடம், தொண்டி, முக்கடல் அணை, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.