தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. 0905247906 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொள்ளலாம். தைவான் தலைநகர் தைபேவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.2 ஆக பதிவானது. உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு இந்தியர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.