பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு வருகிற 4-ந்தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.  4-ந்தேதி (வியாழக்கிழமை), 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் வேலூரில் பிரசாரம் செய்கிறார்.  6-ந்தேதி தென் சென்னையில் பிரசாரம் செய்து டாக்டர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டுகிறார். 7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்தமான் தீவில் பிரசாரம் செய்கிறார். 9-ந்தேதி மும்பையில் பிரசாரம் செய்கிறார்.

மீண்டும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் குஷ்பு 11-ந்தேதி கிருஷ்ணகிரியிலும், 12 மற்றும் 13-ந்தேதிகளில் நாமக்கல்லிலும் பிரசாரம் செய்கிறார். 14-ந்தேதி திருப்பூரில் பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் கேரள மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு செல்கிறார், 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal