நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிக்கல், ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு கடையை நோக்கி சென்றார்.

அங்கு பெண்மணியிடம் இஸ்திரி பெட்டி வாங்கி துணிகளுக்கு இஸ்திரி செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அருகில் இருந்த பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது என்னை வெற்றி பெற செய்தால் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என கூறினார். இதையடுத்து அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal