திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்;  “மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா?. பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவள்ளூருக்கு சிறந்த வேட்பாளரை அறிவித்த சோனியா, ராகுலுக்கு நன்றி .5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் திருவள்ளூரில் மாதம் 2 நாட்கள் தங்கி பணி செய்வேன்” என்று கூறினார். .திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திருவள்ளூருக்கான வாக்குறுதிகளை அறிவித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal